என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊத்துக்கோட்டை விபத்து"
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சமுதாயம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (48) விவசாயி.
இவர் சூளமேனி அருகே செங்கரையில் உள்ள காட்டு செல்லி அம்மன் கோவிலுக்கு செல்ல ஊத்துக்கோட்டை வந்தார். இங்கிருந்து புறப்பட்ட ஆட்டோவில் ஏறினார்.
சூளமேனி கிராம எல்லையில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவிலிருந்து தவறி கீழே விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்து விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து ஆந்திராவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (69). கூலி தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் கூலி வேலை செய்வதற்காக சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் மோதியது.
இதில் படுகாயம்அடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் அனுமந்து விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டையில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தவர் ஜெகதீசன் (வயது 35). இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள சாத்தான் குளத்தை அடுத்த சோலையார்புரம் கிராமம் ஆகும்.
இவர் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அண்ணாசிலை அருகே சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சமையல் கியாஸ் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெகதீசன் பலியானார். ஊத்துக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். மேலும் தப்பி ஓடிய டேங்கர் லாரி டிரைவரை தேடி வருகிறார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ள சாலாபுரம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகேந்திரன் (வயது33). இவர் அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தின் மீது ஏறிய போது தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த சுகேந்திரன் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்தார்.
ஊத்துக்கோட்டையை அடுத்த ஆலபாக்கம் கிராமத்தை சேர்ந்த நரேஷ். ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் ஆட்டோவில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு சென்றார். அதில் 9 பேர் பயணம் செய்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி கவிழ்ந்தது.
கார் மோதிய வேகத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் நரேஷ், ஆட்டோவில் பயணம் செய்த பூண்டி அருகே உள்ள மயிலாப்பூரை சேர்ந்த நதியா, இவரது மகள் ஹர்ஷவர்தினி, தாஸ், நாகசுந்தரி, காட்டம்மாள், ரித்விக், சேகர், செல்வம், கோவர்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதே போல் காரில் பயணம் செய்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் பென்னாலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 12 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்து காரணமாக ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணி (வயது 50) சமையல்காரர்.
நேற்று இரவு உடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த தரணி, சதீஷ் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சமையல் செய்ய சென்றார்.
தச்சூர்மேடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கீழே சரிந்தது.
இதில் மணி, தரணி, சதீஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை, மேற்கு காவாங்கரை பகுதியில் வசித்து வந்தவர் பார்வதி (வயது 80). இன்று அதிகாலை அவர் ஊத்துக்கோட்டை பஸ் டிப்போ அருகே உள்ள புற்று கோவிலை சுத்தப்படுத்த நடந்து சென்றார்.
சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியே வந்த லாரி திடீரென பார்வதி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் விரைந்த வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்தனர். #Tamilnews
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள அழகிரிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் ராமராஜ் (வயது 27), பெயிண்டர்.
இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் பாபுவுடன் மோட்டார் சைக்கிளில் பெரியபாளையத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
ஊத்துக்கோட்டை அருகே செஞ்சிகரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே, ஊத்துக்கோட்டை கலைஞர்நகர் கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்த பிரசன்னா (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென ராம்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராமராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். சத்யா, பிரசன்னா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்